03
04 Job Opportunities
05
06

வேலைவாய்ப்பு அனுமதி ஒழுங்குமுறை (EPS)

 1.   வெளிநாட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு அனுமதி ஒழுங்குமுறை பற்றிய வரைவிலக்கணம்

வேலைவாய்ப்பு அனுமதி ஒழுங்குமுறையானது உள்ளூர் தொழிலாளர்களை ஒப்பந்தத்துக்கு அமர்த்தத் தவறிய தொழில்தருனர்களுக்கு, தேவையான அளவு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது. இது தென்கொரிய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டு பின்பற்றப்பட்டுவரும் ஒரு முறையாகும். கொரியபவிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஒழுங்கான ஒரு முறையில் பராமரிக்க இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.

தென் கொரிய அரசாங்கம் இந்த (EPS) முறையை 2004 ஆகஸ்ட் 17 இல் தொடங்கியது. வியட்நாம், பிலிப்பீன்ஸ், இந்தோனேஷியா, மங்கோலியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஆறுநாடுகளை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் அறிமுகமானது.

1994 முதல் செயற்பட்டு வரும் கைத்தொழில் பயிலுனர் ஒழுங்குமுறை (JTS) வெளிநாட்டு ஊழியர்களைப் பெற்றுக் கொள்ள அதிக செலவை ஏற்படுத்தியது. மேலும் இது வெளிநாட்டு ஊழியர்களைப் பெற்றுக் கொள்ள இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தையும் எடுத்துக் கொண்டது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு தொழில் நுட்பங்களையும், ஆற்றல்களையும் மாற்றுவதன் மூலம் பொரளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டவர்களுக்கு பயிற்சிச் சந்தப்பங்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே இந்த (JTS) முறையாகும்.பொதுவான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வெளிநாட்டுத் தொழில் முயற்சி முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் கைத்தொழில் பயிலுனர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். 01/01/2007 முதல் இந்த முறை நீக்கப்பட்டது. இப்போது வேலைவாய்ப்பு அனுமதி ஒழுங்குமுறை (EPS) மட்டுமே அமுலில் உள்ளது. இதன் மூலம் கொரியாவுக்கு தற்போது 15 நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சேர்த்துக் கெள்ளப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 2004 முதல், வியட்நாம், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, மங்கோலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய மனித வலுவை அனுப்பக் கூடிய ஆங்கீகாரம் பெற்ற ஆறு நாடுகளும் அதற்காக தென்கொரிய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கான ஒரு கணிணி வலைபின்னல் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கிட்டத் தட்ட 70 அலுவலகங்கள் மூலம் கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை நிலையம் இந்தத் திட்டத்தை முறையான ஒரு அமைப்பின் கீழ் நிர்வகித்து வருகின்றது.

இணையத்தளம் www.eps.go.kr

2.   இலங்கையில் (EPS)ஐ அமுல் படுத்தும் முகவர் நிலையம்:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

234,டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை.

தொலைபேசி:+94 11 264101-105

தொலைநகல்:+94 11 2864141

இணையத்தளம்:றறற.www.slbfe.lk

3.   EPS இன் பிரதான இலக்குகள்

 • வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆற்றல் மிக்க முகாமைத்துவ ஒழுங்கு முறையைக் கட்டியெழுப்பல்
 • உள்ளூர் தொழிலாளர்களுக்கு இருப்பது போன்ற மனித உரிமைகள் மற்றும் தொழில் சூழ்நிலைகளை இவர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
 • அபத்தங்களைத் தவிர்க்கும் வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அரசாங்கம் தெரிவு செய்து அபைபுவிடுக்கின்றது.

4.   EPS இன் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு வகைகள்

இந்த ஒழுங்கு முறையின் கீழ் பின்வரும் ஐந்து வர்க்க தொழில் துறையில் மட்டுமே வெளிநாட்டவர்கள் வேலைசெய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.

 • உற்பத்தித் தொழில் துறை
 • நிர்மாணத் தொழில் துறை
 • விவசாய களஞ்சிய விருத்தி – பண்ணை உற்பத்திச் செய்கை,களஞ்சியவிருத்தி
 • மீன்பிடிதொழில்-கரையோரமீன்பிடி,கரைக்கப்பால் மீன்பிடி,நீரியல் துறை 

சேவைத்துறை

குளிரூட்டப்பட்ட களஞ்சியவசதி, சிற்றுண்டிச்சாலை, வர்த்தக ஆதரவு சேவை, சமூகநலன், கழிவகற்றல், மோட்டார் வாகனங்களின் பொதுதிருத்தவேலை, தாதியர்,வீட்டுடமை சேவைகள் முதலியன.

5. புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பமிடல்

மனித வலு சேவைத்துறையில் உள்ள செயற்பாடுகளில் சட்டவிரோத நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் ,கொரிய அரசாங்கம் மனித வலுக்களை அனுப்பிவைக்கும் நாடுகளுடன் நேரடியாகப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்துகொள்கின்றது. அதற்கேற்ப 2004 ஜூன் மாதத்தில் இலங்கை அரசும், கொரிய அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து,பின்னர் புதுப்பித்துக் கொண்டது.

6. தெரிவு செய்தல் பிரமாணங்களும் விண்ணப்பதாரிகளுக்கான தகமைகளும்

பின்வரும் தகைமைகளுடைய விண்ணப்பதாரிகள் கொரிய வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மேலும் இந்தத் தகைமைகள் கொரிய அரசால் வேண்டப்படுபவை.

 • விண்ணப்பதாரி இலங்கைப்பிரஜையாக இருத்தல்.
 • வயது 18-39 இடைப்பட்டிருத்தல்
 • சிறந்த ஆரேக்கியமிருத்தல் (மருத்துவச் சான்றிதழ் ஒன்று அவசியம்)
 • குற்றச் செயல்களின் பின்னணிகள் இருக்கக்கூடாது (பொலிஸ் அறிக்கை அவசியமானது)
 • நாட்டைவிட்டு வெளியேற/கொரியாவுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.
 • இரண்டாம் நிலை பாடசாலைக் கல்வித்தகைமை
 • உயரம் ஆண்களுக்கு 5’2” பெண்களுக்கு 4’8” க்கு மேல்.
 • பாரம் ஆண்கள் 50 கிலோ,பெண்கள் 40 கிலோ

7. தெரிவு செய்தல் படிமுறை

 • எல்லா விண்ணப்பதாரிகளும் கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சையில் (KLPT) சித்தியடைதல்   வேண்டும். கொரிய தொழில் அமைச்சினால் இந்தப் பரீட்சை நடத்தப்படுகின்றது. இந்தப் பரீட்சைக்குத்    தோற்ற, தொழில் தேடுபவர்களுக்கு அவசியமான     கொரிய மொழிப் பயிற்சியை வெளிநாட்டு       வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குகின்றது.
 • கொரிய மொழித் தேர்ச்சி சோதனை குறித்து    வெகுசன ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு,        சோதனைக்காகன அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
 • சித்தியடைந்தவர்கள் வெளிநாட்டு   வேலைவாய்ப்பு பணியகத்துக்கு தொழில்     விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம், பின்னர் தகுதியான விண்ணப்பதாரிகளை இனம் காண     பணியகம் அவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கும்.
 • மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவர்.
 • பொலிஸாரிடம் இருந்து நற்சாட்சிச் சான்றிதழ்       வேண்டப்படும்.
 • இறுதித் தெரிவு
 • தகுதியான விண்ணப்பதாரிகள் பதிவுசெய்யப்பட்டு   ,அவர்கள் பற்றிய தரவுகள் இணையத்தளம்     வழியாக கொரியாவுக்கு அனுப்பப்படும்.. (EPS    இணையத்தளத்தில் இணைத்தல்)
 • கொரியாவில் உள்ள தொழில் தருனர்கள்       ஊழியர்களைத் தெரிவு செய்வர் .அத்தோடு     இயணயத்தளம் வழியாக ஒப்பந்தம்    அனுப்பிவைக்கப்படும்.பின்னர் பணியகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்து    அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதற்கான சம்மதத்தைப் பெரும்.
 • புறப்பட்டுச் செல்வதற்கு முந்திய வதிவிட       பயிற்சிகள் வழங்கப்பட்டு அனுப்பிவைப்பதற்கான சம்பிரதாய செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்படும்.
 • வெற்றிகரமான ஒரு தொழில்வாய்ப்புக்கான இறுதி விளக்கம் அளிக்கப்பட்ட பின் கொரியாவுக்கு      அவர்கள் அனுப்பிவைக்கப்பவர்.

8. தொழில் தேடுபவர்களுக்கான புறப்பட்டுச் செல்லலுக்கு முந்திய பயுற்சிகள்

12.01. ஒப்பந்தம் பெற்றுக் கொள்ளப்பட்ட தொழில் தேடுனர்களுக்கான பயிற்சிகள்

EPSதிட்டத்தின் கீழ் தொழில் செய்வதற்காக கொரியாவுக்குள் வரும் சகல வெளிநாட்டுத் தொழிலாளர்களும் இந்த புறப்பட்டுச் செல்லலுக்கு முந்திய பயிற்சியைப் பூரணப்படுத்தியிருக்க வேண்டும். இது கொரிய மொழி,கொரிய கலாசாரம் மற்றும் EPS என்பனவற்றைப் புரிந்து கொள்ளல், கைத்தொழில் பாதுகாப்பு, ஒவ்வொரு கைத்தொழில் துறையிலும் உள்ள விஷேட விடயங்கள், ஊழியர்களின் தினசரி உடற்பயிற்சி என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.

12.02 தொழில் தேடுனர்களுக்கான கொரிய மொழி ஆற்றல் பரீட்சை (KLPT)

கொரிய நாட்டில் தொழில் தேடும் இலங்கையர்களுக்கு கொரிய மொழியில் பயிற்சிகளை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கொரிய மொழி நூல்கள் ,சிங்கள மொழி உதவியுடன் கெஸட்டுக்கள்,மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகள் என எல்லா வசதிகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.ஒரு பயிற்சி நெறியானது தினசரி முழுநேர பயிற்சியாக 12 தினங்களுக்கு நடத்தப்படுகின்றது.மேலும் இது குறைந்த பட்சம் 100 கற்றல் மணித்தியாலங்களைக் கொண்டது.

பணியகத்தால் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ள 21 உள்ளூர் கொரிய மொழி ஆசிரியர்கள் உள்ளனர்.இவர்கள் தங்களது கற்பித்தல் ஆற்றலை வளர்த்துக் கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன அத்தோடு பாடத்திட்டமிடல் பாடவிதானம் என்பனவும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

9. KOICA உதவிகள்

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (KOICA) அதன் தொண்டர் ஆசிரியர்கள் மூலம் கொரிய மொழியைப் போதிப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குகின்றது. இதுவரை KOICA இத்தகைய ஏழு தொண்டர்களை வழங்கியுள்ளது. கற்கை நெறிகளை விருத்தி செய்யவும் பாடவிதானத்துக்கு அமைய கையேடுகளைத் தயாரிக்கவும் இவர்கள் உதவுகின்றனர். இந்தப் பாடவிதானங்களை கொரியாவின் HRDS வழங்குகின்றது.

10. கொரிய மொழி ஆற்றல் பரீட்சை

 

2005 ஆகஸ்ட் 31 க்குப் பின் கொரியாவில் தொழில் தேடும் விண்ணப்பதாரிகள் கொரிய மொழி ஆற்றல் பரீட்சையில் சித்தியடைய வேண்டியது கட்டாயமாகும். 2005,2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் இதுவரை இத்தகைய ஏழு பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன.இவற்றின் விவரம் பின்வருமாறு.