அனுமதி பத்திரத்தை (உரிமத்தை) பெறுதல்
புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு உரிமங்களை பெறுவதற்கு விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டையுடன் ளுடுடீகுநு இன் உரிமப் பிரிவுக்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
• நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
• உரிம விண்ணப்பத்துக்கான தொகை - ரூ. 7077/-
இதன் மூலம் உங்களுக்கு ஒரு அலுவலகம் கிடைக்கப்பெறும்.
• பொது போக்குவரத்துக்களுக்கு எளிதாக அணுகக்கூடிய இடத்தில் அமைந்திருக்கும்.
• குறைந்தபட்சம் 500 சதுர அடியினைக் கொண்ட தரைப்பரப்பாக இருக்கும்.
•IDD அழைப்புகளுடன் கூடிய தொலைபேசி வசதிகள்,தொலைநகல், கணினிகள், தரவுத்தளங்கள், அச்சிடுபவர்கள், பிரதியெடுப்பவர்கள் மற்றும் வர்த்தக சோதனை வசதிகளுடன் அமைந்திருக்கும்.
நீங்கள் சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:
• வியாபார பதிவு சான்றிதழ் அல்லது சான்றுப்படுத்தப்பட்ட படிவத்தின் பிரதி48மற்றும் கட்டுரைகள்இ குறி;ப்புக்கள் ( நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தால்)
• அலுவலகத்தின் தள அமைப்புபடம் மற்றும் குத்தகை உடன்படிக்கை அல்லது கட்டிடத்தின் பத்திரம்
• வியாபாரம் /நிறுவனத்தின் பங்காளர்களின் குடியுரிமை சான்றுகள்
• வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தூதரகத்தின் பொறுப்பில் இருக்கும் நபரின் குண இயல்புகள் மற்றும் இரு சான்றுகள்;. இதில் ஒன்று அவர் வசிக்கும் பகுதியின் உள்;Sர் கிராமசேவக உத்தியோகத்தரிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர் அந்த பகுதியில் வசிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
• நீங்கள் அல்லது உங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சார்பாக கொமர்சல் வங்கிக்கு ரூ 750,000/- க்கான உத்தரவாதம்.
• புதிய உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் - இருநூறாயிரம் ரூபாய் (200,000+SSCL+ VAT)
• உங்களை பற்றியும் உங்கள் பங்குதாரர்கள் பற்றியும் உங்கள் வெளிநாட்டு முகவர் நிலைய தலைவர் பற்றியும் கீழ்வரும் ஆவணங்களை நீங்கள் கையளிக்க வேண்டும்.
- பிறப்பு சான்றிதழ்கள்
- சுயவிபரப்படிவங்கள்
- அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதிகள்
- அருகிலுள்ள பொலீஸ் நிலையத்திலிருந்து பொலீஸ் அறிக்கை
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்
மேலுள்ள ஆவணங்களை கையளித்த பின்னர் SLBFE குழுவானது கட்டிட வளாகத்துக்குச் சென்று ஆய்வு செய்து உரிமத்துக்கான அனுமதியை வழங்குவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும்.
உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமமானது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
உரிமத்தைப் புதுப்பித்தல்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கிடைக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்;பித்து உங்கள் முகவர் உரிமத்தைப் புதுப்பிக்க முடியும்.
உரிமம் காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்னர் நீங்கள் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் SLBFEயானது உங்கள் கடந்த கால செயல்திறனை மதிப்பீடு செய்து உங்கள் அலுவலகம் உபகரணங்கள், பதிவுகள், நீடிக்கப்பட்ட வங்கி உத்தரவாதம் மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை வழங்கும்.
உங்கள் முகவர் நிறுவனத்தை புதிய இடத்திற்கு மாற்ற விரும்பினால் பின்வரும் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பம் செய்வதன் மூலம்SLBFEஇன்உரிமப்பிரிவின் சம்மதத்தை பெற முடியும்.
• புதிய அலுவலகத்தின் அமைவிடம்
• குறிப்பிட்ட கட்டிடத்துக்கான சட்டபூர்வ சான்றுகள்
• புதிய கட்டிட வளாகத்தின் திருத்தப்பட்ட வர்த்தக பதிவு சான்றிதழ்
• புதுப்பித்தலுக்கான கட்டணம் - ரூ 100,000/-(SSCL+ VAT)
Follow us on