1985ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்தின் 51ம் பிரிவின் படி,1994ம் ஆண்டின் 4ம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட அனைத்து இலங்கையர்களும் இலங்கைக்கு வெளியில் வேலைக்குச் செல்லும் அனைத்து இலங்கையர்களும் அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் SLBFE இல் பதிவு செய்வதற்கு பின்வரும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பதிவு கட்டணம் LKR 18,200+SSCL 2.5%+VAT15% +NBT2%
மேலே செய்யப்பட்டிருக்கும் பதிவானது பணியமர்த்துபவர்களுக்கு 2 வருட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். எந்தவொரு இலங்கையரும் தனது வேலைவாய்ப்பை ஒப்பந்த காலத்துக்கு அப்பால் நீடிக்க விரும்பினால் பின்வரும் புதுப்பித்தல் கட்டணத்தைச் செலுத்தி தற்போதுள்ள பதிவு காலாவதியாகும் முன் பதிவைப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
LKR 3,800+VAT15%+SSCL 2.5%+NBT2%
இவ்வாறு சேகரிக்கப்படும் கட்டணங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல நலத்திட்டங்கள் மூலம் வெளிநாட்டிவ் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. (ஆதரவற்ற பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை பராமரித்தல், ஆதரவற்ற தொழிலாளர்களை திருப்பி அனுப்புதல், காப்பீடு தேவைப்படும் தொழிலாளர்களுக்கு சட்ட உதவி போன்றவை)
எனவே வேலைக்காக வெளிநாட்டிலிருந்து வெளியேறும் அனைத்து இலங்கையர்களும் பொறுப்புள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக மேலே குறிப்பிட்டதன் படி பதிவுக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Follow us on