01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17

அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள பின்வரும் வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை வைத்திருக்க வேண்டும்.

 

 

  • பொதுப்போக்குவரத்து வசதிகள் மூலம், இலகுவாக பயணம் செய்யக்கூய இடத்தில் இருக்க வேண்டும்.
  • அந்த இடம் குறைந்த பட்சம் 500 சதுர அடி பரப்பளவு கொண்டதாக, இருக்க வேண்டும்.
  • சர்வதேச நேரடி அழைப்புடன் கூடிய தொலைபேசி வசதி, பெக்ஸ் வசதி, கணினிகள், தகவல் தரவுகள், தட்டச்சு ,இயந்திரங்கள், போட்டோகொப்பி இந்திரங்கள் மற்றும் வர்த்தக சோதனை வசதிகள் என்பன, இருக்க வேண்டும்

இவைகள் இருக்கும் பட்சத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்தித்திரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

  • வர்த்தகப் பதிவு சான்றிதழ் அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட படிவம் 48 மற்றும் (பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பனியாயின்) அது சம்பந்தமான ஆவணங்கள்.
  • அலுவலகத்தின் தரைவடிவப்படம் மற்றும் காணி உறுதி அல்லது குத்தகை உடன்படிக்கை.
  • வர்த்தக/கம்பனி பங்காளிகளின் பிரஜா உரிமையை ஊர்ஜிதம் செய்யும் சத்தியக்கடதாசி.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு பொறுப்பான நபரின் நற்சான்றை உறுதிசெய்யும் இரண்டு அண்மைக்கால ஆவணங்கள். இவற்றுள் ஒன்று அவரின் வதிவிடத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அவர் வசிக்கும் பிரதேச உள்ளூர் கிராமவசேவை அதிகாரியுடையதாக, இருக்கவேண்டும்.
  • உங்களுக்கு அல்லது உங்கள் முகவர் நிலையத்துக்கு சார்பாக வர்த்தக வங்கியொன்றால் விநியோகிக்கப்பட்ட வங்கி உத்தரவாதம்
  • நீங்கள் உங்களைப்பற்றியும் உங்களது முகவர் நிலைய பங்காளிகள் அல்லது பணிப்பாளர்கள் பற்றி பின்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

-         பிறப்புச் சான்றிதழ்(கள்)

-         தனிப்பட்ட விவரம்(கள்)

-         தேசிய அடையாள அட்டை(கள்),அல்லது

   கடவுச்சீட்டின் பிரதிகள்.

-         அண்மிய பொலிஸ் நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நற்சான்றிதழ்

-         அலுவலக பொறுப்பாளரின் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்.
 

மேற்சொன்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு முன் பணியகத்திலிருந்து ஒரு குழு விஜயம் செய்து உங்களது இடத்தையும் நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் அவற்றின் சட்டபூர்வ செல்லுபடித்தன்மை என்பனவற்றை பரிசீலிக்கும்.

நீங்கள் பெற்றுக்கொள்ளும் அனுமதிப்பத்திரம் அது வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருட காலத்துக்கே செல்லுபடியாகும்.