00
00
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
14
14
15
16
17
20
21

ஆட்சேர்ப்பு நடைமுறை

இலங்கையில் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள்

     இலங்கையில் கடல் கடந்த நாடுகளில் வேலை செய்வதற்கான ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனங்களில் ஒன்றான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது.அத்தோடு பல தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த முகவர் நிலையங்களின் நட்சாச்சிப் பத்திரங்கள் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. பணியகத்தால் இவை கவனமாக பரிசீலிக்கப்பட்டே அவற்றுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஒழுங்கமைக்கும் ஒரு அமைப்பாகவும் பணியகமே செயற்படுகின்றது.

 இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நம்பத்தகுந்தவை.போட்டித் தன்மை மிக்க இந்த அமைப்புக்கள் தமது பிரதான சகாக்களுடன் மிகச் சிறந்த உறவுமுறையைப் பேணி அதி உயர் ஆற்றல் மட்டத்தில் தமது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்த எல்லா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும், அனுமதி அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கத்தில் (ALFEA) உறுப்பினர்களாய் உள்ளன. இவற்றின் செயற்பாடுகள் அனைத்தையும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் கண்காணித்தவண்ணம் உள்ளது.

    இந்தப் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களால் 2007ஆம்ஆண்டு காலப்பகுதியில் 146515 கடல் கடந்த தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்சேர்ப்பு சேவைகள் முகவர் நிலையங்கள்

     தொழிலுக்காகச் செய்யப்படும் சகல விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரிகள் அவர்களின் தொழில் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நேர்முகப் பரிசோதனைக்கு உள்வாங்கப்படுகின்றனர்.தொழில் தருனரின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமுடையவராக விண்ணப்பதாரி இருக்கின்றாரா என்பதும் இதன் மூலம் உறுதிசெய்யப்படுகின்றது. வர்த்தக சோதனைகள் (தேவைக்கு ஏற்ப) சுதந்திரமான அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன.இந்த அமைப்புக்கள் இத்தகைய சோதனைகளை நடத்தும் தகுதி உள்ளவையா என்பது குறித்து ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகின்றது.

பின்னர் உடல்ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் உறுதி செய்ய மருத்துவசோதனைகள் நடத்தப்பட்டு அவர்களது பின்னணியும் இலங்கைப் பொலீசாரால் பரிசீலிக்கப்பட்டு இவற்றில் தேர்ச்சியடையும் நபருக்கு கடவச்சீட்டு, விஸா, டிக்கட் என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் தாமதமின்றி வழங்கப்படுகின்றன.