00
02
02
02
02
02
03
04
05
06
07
08
09
10
10
11
12
14
14
14
15
16
17
20
21

புறப்பட்டுச் செல்லும் அனுமதி

நீங்கள் ஒரு அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராயின்,ஏற்கனவே தேவையான அனுமதிகளையும் நீங்கள் பெற்றிருப்பின், வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய ஒரு ஊழியரும் உங்களிடம் இருப்பின் நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது

·    சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் அவர் புறப்பட்டுச் செல்லும் தினத்தில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கடவுச்சீட்டு இருக்கின்றதா.

· அவர் அல்லது அவள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படும் தேவையான பயிற்சிகளைப் பெற்றுள்ளாரா

     இந்த அடிப்படையில் அந்தத் தொழிலாளி தகுதியானவராயின் பின்ரும் ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இறுதி அங்கீகாரத்துக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

1.      புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளியின் அசல் கடவுச்சீட்டு.

2.      குறிப்பிட்ட நாட்டுக்கும் அங்கு தொழில்புரிவதற்குமான தகுதியான விஸா

3.      நீங்கள் அந்த புலம் பெயர் தொழிலாளியும் செய்து கொண்ட ஒப்பந்தம்.

4.      பூர்த்தி செய்யப்பட்ட “H” படிவம்

5.      தேவையான பயிற்சிச் சான்றிதழ்

6.      முதல் அனுமதி தொடர்பான பிரதி

7.      பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியமைக்கான வங்கிப் பற்றுச்சீட்டு
 

     நீங்கள் மேலும் நிலனவில் வைத்திருக்கவேண்டியது

·    இறுதி அங்கீகாரத்துக்கான ஆவணங்களோடு தொழிலோடு தொடர்புடைய முதல் அனுமதியின் அசல் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.

· நீங்கள் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு ஒரு பணிப்பெண்ணை அனுப்புவதாயின், உங்கள் தொழில் உடன்படிக்கை பின்வரும் கையொப்பங்களையும் முத்திரைகளையும் கொண்டிருக்க வேண்டும்..

o       வெளிநாட்டு முகவரின்

o       அனுசரணையாளரின்

o       தூதரக அதிகாரியின்

o       உள்ளூர் முகவரின்

o       புலம் பெயரும் தொழிலாளியின்

 

     தேவையான இந்த ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்து ,தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் பணியகம் உங்களுக்கு இறுதி அனுமதி யை வழங்கும்.

அதன் பின்னர் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளியின் கடவுச்சீட்டில் தகுதியான முத்திரை பதியப்படும்.