01
02
03
04
07
08
09
10
11
12
13
14
15
16
17

வெளிநாட்டு வேலைவாய்ப்பை முடிவு செய்

கடல் கடந்து தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல வேண்டும் எனமுடிவு செய்வது ஒரு அற்புதமான வாய்ப்பாகும் அது உங்களுக்கும் உங்களது குடும்பத்துக்கும் அளப்பரிய நன்மைகளைக் கொண்டுவரக் கூடியது.உள்ளூரில் தொழில் தேடுவதை விட சில வேளை வெளிநாட்டில் தொழில் தேடுவது இலகுவானது,மேலும் உள்நாட்டு வேலைவாய்ப்பை விட அது ஆகக் கூடிய வருமானத்தையும் தரக்கூடியது.

 

v     அது உங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும்.

 

v     ஒரு காணியை வாங்கவோ அல்லது வீட்டைக்கட்டவோ தேவையான பணத்தை நீங்கள் சேமிக்கலாம்,நீங்களாகவே ஒருதொழில் முயற்சியைத் தொடங்கலாம் அல்லது சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்து கொள்ளலாம்.

 

v     உங்கள் குடும்பத்தின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

 

v     நீங்கள் எதிர்ப்பார்க்கும் சுதந்திரத்தையும், அந்தஸ்த்தையும்  நீங்கள் அடைந்து கொள்ளலாம்.

 

v     நீங்கள் மேலதிக/புதிய ஆற்றல்களை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்.அது வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள உதவும் அல்லது உள்ளூரில் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கலாம்.

 

அது எவ்வளவு வருமானம் தருவதாகவோ அல்லது ஆசை காட்டுவதாகவோ தென்பட்டாலும் கூட புலம்பெயர்வது தொடர்பான முடிவை எடுக்க முன்பதாக கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்களும் உள்ளன.

 

1.     வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடு செல்ல வேண்டும் என்று எடுக்கின்ற முடிவு உங்களை வெற்றியாளனாக்குமா?

 

2..      உங்கள் பிள்ளையின் நலன்கள் மற்றும் சுகாதார (தடுப்பு மருந்தேற்றல்,நோய் நிலைகள் மற்றும் பால் உணர்வு சம்பந்தமான விடயங்கள்) தொடர்பான விடயங்களை,இந்த பராமரிப்பாளரால் கவனிக்க முடியுமா?

 

o       பிள்ளைகளால் அன்றாட வாழ்வை (பாடசாலை செல்லல்,வெளிக்களச் செயற்பாடுகள்) இடையூரின்றி கொண்டு செல்ல முடியுமா?

 

3       நீங்கள் இல்லாத பட்சத்தில்,இடையுறுகளின்றி உங்கள் வாழ்க்கைத் துணையால் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல முடியுமா?

 

4        நீங்கள் வெளிநாட்டில் தொழில் புரியும் காலத்தில் உங்களாலும்,உங்கள் வாழ்க்கைத் துணையாலும் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க              முடியுமா?

 

5        உங்களது பெற்றார் அல்லது பிள்ளைகளைப் போல் உங்கள் விஷேட கவனம் தேவைப்படும் ஒருவரை இது பாதிக்குமா?

 

6        இலங்கையில் உங்களுக்கு தொழில்கள் கிடையாதா?

 

o       அவற்றைப் பற்றி நீங்கள் கரிசனை காட்டினீர்களா?

 

o       தேவையான தகைமைகளை நீங்கள் எவ்வாறு பெறலாம்?

 

o       உங்களுக்கு மிகவும் பொறுத்தமான கிடைக்கக் கூடிய தொழில் எது?

 

நீங்கள் இவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

 

v     நீங்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்று பின், உங்கள் சொந்தவிருப்பத்தின் பேரிலோ,அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்திலோ அல்லது ஒரு அவசரத்தின் நிமித்தமோ நீங்கள் திரும்பி வர முனைந்தால் அதற்கான செலவு மிகவும் அதிகமானதாகும்.ஏனெனில் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பிரயாண செலவை நீங்களே ஏற்க வேண்டும்.

 

v வெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான செலவு மிகவும் அதிகமானது.கடவுச்சீட்டு,பிரயாணச் செலவு,ஆரம்ப ஏற்பாடுகளுக்கான செலவுகள் என எல்லாவற்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

 

v     உங்களது சொத்தை அடகு வைத்தோ அல்லது விற்றோ நீங்கள் ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொண்டால் உங்களுக்கென பணத்தைச் சேமித்துக் கொள்ள முடியாத நிலையில் சாதகமற்ற சூழ் நிலைகளின் கீழ் நீங்கள் சில காலம் வேலை செய்ய நேர்ந்தால் அல்லது ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் நீங்கள் இடையில் திரும்ப வேண்டியிருந்தால் உங்கள் சொத்தை இலக்க நேரிடலாம்.

 

v     நீங்கள் வித்தியாசமான ஆற்றல் குறைந்த ஒரு தொழிலுக்காக வெளிநாடு சென்றால் தற்போது உங்களிடம் இருக்கும் ஆற்றலைக் கூட நீங்கள் இலக்க நேரிடலாம். 

 

     (ஒரு இலிகிதர் வீட்டுப்பணிப் பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்வது போன்ற நிலைமை)