03
04 Job Opportunities
05
06
08
09
10
11

ஒரு முகவரின் மூலமாகத் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளல்

நீங்கள் உள்ளூரில் முகவர் ஒருவரின் மூலம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டால் நீங்கள் பின்வரும் விடயங்களைச் சரி பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

*     உங்கள் முகவர் பணியகத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்றவரா?

*    உங்களுக்கு தொழில் கிடைக்கும் காலத்தில் அவரின் அனுமதிப் பத்திரம் செல்லுபடியானதா?

*     உங்கள் முகவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளாரா?

*     ஆட்சேர்ப்புக் காலம் வரை முதலாவது அனுமதி செல்லுபடியாகும்

     மேற்சொன்ன காரணங்கள் பூர்த்தியாக இருப்பின் அந்த முகவர் கேட்டுக் கொள்வதற்கமைய நீங்கள் கடவுச்சீட்டையும் ஏனைய ஆவணங்களையும் ஒப்படைக்கலாம்.கடவுச்சீட்டானது பதிவு செய்யப்படும் காலத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.அதன் பிறகு வெ.வே.ப குறிப்பிடும் பதிவுக் கட்டணத்தை நீங்கள் செலுத்தவேண்டும்.இது எவ்வாறாயினும் முகவரின் அனுமதிக்கட்டணத்துக்குள் சேர்க்கப்படாது.

நீங்கள் ஒரு மத்தியகிழக்கு நாட்டுக்குப் புலம் பெயர்வதாயின்

*     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்ற ஒரு பதிவுக்கட்டணத்தை மட்டும் நீங்கள் செலுத்த வேண்டும்.

*     தேவை ஏற்படின் நீங்கள் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

*     வேலைவாய்ப்பு உடன்படிக்கையின் பூர்த்தி செய்யப்பட்ட பிரதியொன்று உங்களிடம் இருக்க வேண்டும்.

*     உங்கள் முகவர் பணியகத்தின் தேவையான அனுமதியைப் பெற்ளுக் கொள்வதோடு பின்வரும் ஆவணங்களை உங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

o       இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அங்கீகார முத்திரையுடன் கூடிய கடவுச்சீட்டு

o       தகுதியான விஸா

o       விமான பயணச்சீட்டு

o       தொழில் உடன்படிக்கை

o       வங்கிப் பற்றுச்சீட்டின் வாடிக்கையாளர் பிரதி

o       காப்புறுதிச்சான்றிதழ்