இந்தப் பகுதி வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் அல்லது உறவினர் மூலம் தொழில் தேடுவோரைக் கருத்தில் கொள்கிறது.
நீங்கள் எவளிநாட்டில் வசிக்கும் உறவினர் அல்லது நண்பர் மூலம் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டால்
* உங்களுக்கு மிக அருகில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்திற்குச் சென்று அவசியமான பயிற்சியைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் .
*அதன் பின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்துக்கு விஜயம் செய்து அல்லது மிக அருகில் உள்ள பயிற்சி நிலையத்திற்குச் சென்று பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்து உங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
o உங்களின் கடவுச்சீட்டு
o பயிற்சிச் சான்றிதழ்
o தகுதியான விசா
o தொழில் உடன்படிக்கை
*மேற்சொன்ன ஆவணங்கள் யாவும் முறைப்படி அமைந்திருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களுக்கு நீங்கள் தேவையான பதிவுக் கட்டணத்தைச் செல்த்துவதற்கான படிவத்தையும் வங்கிப் பற்றுச்சீட்டையும் வழங்குவார்.
* பின்னர் நீங்கள் அந்த அதிகாரி குறிப்பிடுவதற்கு அமைய வங்கியில் உங்கள் பதிவுக்கட்டணத்தைச் செலுத்தலாம்.
* இவை பூர்த்தியானதும் நீங்கள் பின்வரும் ஆவணங்களை பணியகத்தில் ஒப்படைக்கலாம்.
o வங்கி உறுதிப்படுத்தலுடன் வங்கிப் பற்றுச்சீட்டு
o பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்
o கடவுச் சீட்டு
o பின்வரும் ஆவணங்களின் போட்டோ பிரதிகள்
1. கடவுச்சீட்டின் பிரதான பக்கம்
2.முன்னைய வருகை மற்றும் செல்கை சம்பந்தமான கடவுச்சீட்டின் பக்கங்கள் (நீங்கள் பயிற்சியிலிருந்து விதிவிலக்களிக்கப்பட வேண்டியவராயின்)
3. விஸா/வேலைஅனுமதிப்பத்திரம்/ஆட்சேபனைஇல்லை எனக் கூறும் சான்றிதழ்.
4. தொழில் உடன் படிக்கை மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள்
மேற்சொன்ன ஆவணங்கள் யாவும் ஒழுங்காக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரி உங்கள் கடவுச்சீட்டில் உரியமுத்திரையைப் பதிப்பதன் மூலம் உங்களுக்குத் தேவையான அனுமதியை ஊர்ஜிதம் செய்வார்.
Follow us on