சகல ஒழுங்கு முறைகளையும் /விதிமுறைகளையும் நீங்கள் பின்பற்றியிருந்தால் அத்தோடு பணியகத்தின் தேவையான ஆங்கீகாரத்தையும் நீங்கள் பெற்றிருந்தால் உங்களது பயணத்துக்கு நீங்கள் தயாராகலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் பின்வரும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
· நீங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய, அவற்றைக் கவனிக்கக் கூடிய அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்வதோடு அதற்கான நபர்களையும் நியமிக்க வேண்டும்.
· இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் உங்கள் பகுதியில் நியமனம் செய்யப்பட்டுள்ள பின்வரும் அதிகாரிகளை நீங்கள் சந்தித்து அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கவேண்டும்.அப்போது தான் அவர்களால் உங்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்த முடியும்.
o நன்நடத்தை அதிகாரி (உங்கள் வீட்டில் அல்லாமல் வேறு இடத்தில் உங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்வதாயின்)
o அதிபர் மற்றும் ஆசிரியர்கள் (பாடசாலை செல்லம் பிள்ளைகள் உங்களுக்கு இருப்பின்)
o உங்கள் பிரதேச கிராமசேவகர்
o பொது சுகாதார மருத்துவச்சி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் (உங்களுக்குப் பிள்ளைகள் இருப்பின்)
o உதவி அரச அதிபர் பிரிவுகளில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (உங்களுக்கு மேலதிக ஆலேசனை தேவைப்படின்)
· உங்கள் வீட்டில் அல்லது உங்கள் விடயங்களைப் பொறுப்பேற்றுள்ள பராமரிப்பாளரிடம் தயவு செய்து பின்வரும் ஆவணங்களையும் விட்டுச் செல்லுங்கள்
o உங்கள் கடவுச்சீட்டின் பிரதி
o உங்கள் தொழில் உடன்படிக்கையின் பிரதி
o உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள முகவர் நிலையத்தினதும்,வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் தொடர்புகொள்ளல் விபரங்கள்.
· உங்கள் பயண நேரத்துக்கு குறைந்த பட்சம் மூன்று மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு வந்துவிடவும்.
· புறப்பட்டுச் செல்வதற்காக நன்கு சுத்தம் செய்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ளவும். (கட்டுநாயக்காவின் எட்டாவது மைல் பிரதேசத்தில் பெண்களுக்கான விஷேட இடைத்தங்கல் இடமொன்றும் பணியகத்துக்கு உண்டு)
விமான டிக்கட், கடவுச்சீட்டு, விஸா ஆவணங்கள், விமானவிபரம்,அனுசரணையாளர் விபரம் அல்லது விமான நிலையத்தில் உங்களை வரவேற்கக் கூடிய நபர் பற்றிய விவரங்களை இலகுவாக வழங்கக் கூடியவாறு வைத்திருக்கவும்.
Follow us on