01
02
03
04
07
08
09
10
11
12
13
14
15
16
17

வெளிநாட்டிலே வேலை செய்தல்

நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்ற போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நீங்கள் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்தால்

·  அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தை அல்லது இராஜதந்திர நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

·     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சமரசபிரிவு, வெளிநாட்டு விசாரணைகள் பிரிவு அல்லது சமூகவியல் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு நண்பர் ஒருவரை அல்லது உறவினர் ஒருவரைக் கேளுங்கள்.

·  உங்களுக்கு சில ஓய்வு நேரம் இருப்பின் அந்த நாட்டில் உள்ள சுய உதவிக் குழுவொன்றுடன் பணியாற்றுவதன் மூலம் அதைப் பிரயோசனமாகப் பயன்படுத்தலாம்.

·  நீங்கள் உங்களை HIV/AIDS மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

·  ஒப்பந்தம் பூர்த்தியானதும் நீங்கள் உழைத்த பணத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து அவற்றை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.

· உங்களின் வதியாதோர் வெளிநாட்டு நாணயமாற்றுக் கணக்கைப் பேணிக் கொள்ளவும்.அது உங்களுக்குப் பல கடன் வசதிகளைப் பெற்றுத் தரும்.

     நீங்கள் தொழில் புரியும் காலப்பகுதியில் உங்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படாவிட்டால்,அல்லது உங்கள் அனுசரணையாளர் உங்கள் ஒப்பந்தத்தை மீறினால் அதுபற்றி மேற்சொன்ன அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.