இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான முதலாவது வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கண்காட்சி, அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பங்கேற்புடன் கண்டி நுகவெல மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று (22) நடைபெற்றது.
வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளைத் தொடர்வதற்கு தொடர்புடைய நிறுவனங்களால் வழிநடத்தப்படவும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான வாய்ப்புக்களும் கிடைக்கப்பெற்றனர். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வும், சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டன.
NAITA, VTA, மற்றும் ஹோட்டல் பயிற்சி நிறுவனங்கள் போன்ற அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் அதிக தேவை உள்ள வேலைகள் தொடர்பான தொழில் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பும் அடங்கும். இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிரதம அதீதியாக கலந்துகொண்ட வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்:
அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிய பிறகு அவர்களைக் கூடுதல் கவனித்துக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது அவசியம் என்பதனையும் வலியுறுத்தினார். இனிமேல் தொழிலாளர்கள் தேர்வு முறைமையில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். எதிர்கால சந்ததியினருக்கு எந்தப் பிரச்சினையையும் விட்டு வைக்காமல், ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தைத் தவிர்த்து, நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படும் என்றும் மேலும் கூறியிருந்தார்.