எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு ஜப்பானில் புதிய வேலை வாய்ப்புகள் திறக்கப்படும் என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதர் திரு. இசோமாட்டா அகியோ (Mr. Isomata Akio) அறிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு. கோசல விக்ரமசிங்க அவர்களை இன்று (08.01.2025) பணியகத்தில் சந்தித்தபோது ஜப்பான் தூதர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நம்புவதாகவும், இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜப்பான் தூதர் தெரிவித்தார். ஜப்பான் வேலைவாய்ப்புக்காக் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து தூதர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு, இலங்கை இளைஞர்கள் காட்டிய உபசரிப்பை மிகவும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில், பணியகத்தின் தலைவர் திரு.கோசல விக்ரசாமசிங்க, ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் எதிர்காலத்தில் புதிய தொழில் துறைகளை திறப்பதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பில் ஜப்பானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் திரு.விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள இலங்கை சமூகம் மூலம் இலங்கையைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம், பொருளாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் இலங்கைக்கு ஜப்பானின் ஆதரவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றும் அவர், கேட்டுக் கொண்டார்.