இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1994 ஆம் ஆண்டின் 4மற்றும் 2009 ஆம் ஆண்டின் 56 அம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்ட 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் 53 (3) பிரிவின்படி இலங்கைக்கு வெளியில் வேலைக்காக செல்லும் ஒவ்வொரு இலங்கையரும் வெளியேறும் முன் பணியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் சுயமாக வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்கிறீர்கள் என்றால், ஆன்லைன் முறை மூலம் பணியகப் பதிவைப் பெற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
வயது வரம்புகள்:
வீட்டு வேலைக்காக வெளியூர் செல்ல ஒரு பெண்
நீங்கள் ஒரு திறன் தொழிலாளியாக அல்லது தொழில்முறை மட்டத்தில் வேலைக்குச் செல்கிறீர்கள் என்றால்இ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பணி அனுபவச் சான்றிதழை (6 மாதங்களுக்குக் குறையாத சேவை) அல்லது தொழில் தகுதிச் சான்றிதழ்கள் / பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் / டிப்ளோமா சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
(சவூதி அரேபியாவிற்கான பதிவை புதுப்பிக்கும் போது தயவுசெய்து இகாமா அட்டை அல்லது அதன் பிரதியை சமர்ப்பிக்கவும்)
The initial registration fee is Rs.22,027.00 -(Rs.18,200.00 + 18% (VAT) + 2.5%(SSCL)
பதிவை புதுப்பித்தல் கட்டணம் ரூ.4,599.00 (ரூ.3,800.00 +18% (VAT)+2.5%(SSCL)
கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவரிடமிருந்து புதிய விசாஃ வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பெற்றவுடன் (கடைசிப் பதிவுக்குப் பிறகு வேலையளிப்பவர் அல்லாதவர் வேறொரு முதலாளியிடம் வெளிநாடு சென்றிருக்கக் கூடாது)
பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட நபர்இ பணியகத்தால் வழங்கப்படும் இலவச உள்ளுர் காப்புறுதியின் பலன்களைப் பெற முடியாது.