LATEST NEWS

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டும் மற்றும் வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டு நாடு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை பணியகம் நடைமுறைப்படுத்துகிறது.

வெளிநாட்டு தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் பொருளாதார சிரமங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுவர்களின் நலன் கருதி இந்த நலன்புரி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த பாடசாலை உபகரணங்களை வழங்குவது தொடர்பில் சில சமூக ஊடகங்கள் பொய்யான பிரசாரம் செய்து வருகின்றமையினால்அதற்கான தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் பொய்ப் பிரச்சாரத்தால் ஏராளமான மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடுகளில் வேலை செய்யும்,வெளிநாடுகளில் வேலை செய்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுகின்ற. அதன்படிஒரு மாணவருக்கு ஒருமுறை ரூபா.10,000 மதிப்புள்ள பாடசாலை உபகரணங்களை பெறுவதற்கான கட்டளைஅத்தொழிலாளி வசிக்கும் மாகாணத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை மாகாண செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 02கட்டங்களாக வழங்கப்படுவதோடுதற்போது வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றேர்களின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலைகளில் தரம்1முதல் தரம் 13 வரை கல்வி கற்பவர்களுக்குவெளிநாட்டில் தொழில் புரிந்து இலங்கைக்கு திரும்பி வந்து 5வருடங்களுக்கு குறைவான பெற்றேர்களின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான ரூபா10,000பெறுமதியான கட்டளை வழங்கப்படுகின்றது. இந் நிகழ்ச்சி திட்டமானது பணியகத்தின் நலன்புரிப் பிரிவு மற்றும் மீள் ஒருங்கினைப்பு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களை பெறுவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் பிரதிகள்பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர் மற்றும் அதிபரின் பரிந்துரையுடன் தேவையான பாடசாலை உபகரணங்களின் பட்டியல் (அதிகபட்சம் ரூபா 10,000) தாய் / தந்தை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு சென்றுள்ளார்; என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் (கடவுச்சீட்டின் நகல்) வசிப்பிடச் சான்று (கிராம அதிகாரியின் பரிந்துரையுடன்),பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் தொழில் புரிந்து இலங்கைக்கு திரும்பி வந்து 5வருடங்களுக்கு குறைவான பெற்றோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டமானது பணியகத்தின் மீள் ஒருங்கிணைப்பு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் 10,000ரூபா பெறுதியான பாடசாலை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான கட்டளை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை உங்களுக்குறிய பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

2024ஆம் ஆண்டில்இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், பணியகத்தின் மீள்ஒருங்கிணைப்புப் பிரிவின் ஊடாக வெளிநாட்டு வேலையிலிருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாடசாலை செல்லும் 1,185 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூபா.11.33 மில்லியன் ஆகும்.

மேலும் 2024ஆம் ஆண்டில்,பணியகத்தின் நலன்புரிப் பிரிவினால் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாடசாலைக்குச் செல்லும் 12,781 குழந்தைகளுக்கு ரூபா.121மில்லியன் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு ஏமாறாமல் சரியான முறையில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர் சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

.

TA