பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (புதிய/புதுப்பித்தல்)
முதன்முறையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் தேவைகள் (புதிய பதிவு):
முதல் முறை பதிவு
முதன்முறையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம்
தொடக்கப் பதிவுக் கட்டணம் ரூ. 22,027 / = (18,200 + 18% (VAT) +2.5%(SSCL))
மேற்கண்ட கட்டணங்கள் இதற்கு பொருந்தும்;:
பணியகத்தில் பதிவு புதுப்பித்தல்
உங்கள் பணியக பதிவை புதுப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் தேவைகள்
(சவூதி அரேபியாவிற்கான பதிவைப் புதுப்பிக்கும்போது தயவுசெய்து இகாமா அட்டை அல்லது அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.)
Registration renewal fee is Rs.4,599 / = (Rs.3,800 +18% (VAT)+2.5(SSCL) )
நீங்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்கிறீர்கள் என்றால் நிகழ்நிலை மூலம் பணியக பதிவுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது மற்றும் கட்டணத்தை நிகழ்நிலையில் செலுத்தலாம். முதல் முறையாக பதிவு செய்வதற்கும்இ பதிவை புதுப்பிப்பதற்கும் நிகழ்நிலையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பணியக பதிவுக்காக பணியக தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்குச் செல்லும்போது அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் முறை பதிவு செய்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல்
பணியகம் பதிவை புதுப்பிக்கும் போது அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் இருந்து பணியமர்த்துபவர் மாற்றத்தின் போது பதிவைப் பெறலாம்.
பணியகப் பதிவைப் பெற்றதிலிருந்து ஒரே முதலாளியின் கீழ் பணிபுரிந்தால் அது பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் உங்களின் முந்தைய வேலை ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிட்டால் அல்லது பணியமர்த்துபவர் மாறிய எந்த நாளிலும் பணியகப் பதிவின் 2 வருட செல்லுபடியும் செல்லாது. புதிய முதலாளியின் கீழ் புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் நுழையும் நேரத்தில் ஆரம்ப பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி பணியகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தலைமை அலுவலகம் அல்லது பணியகத்தின் கிளை அலுவலகத்திற்குச் சென்று உங்கள் பதிவைப் புதுப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் செல்லுபடியாகும் விசாவின் நகல் மற்றும் பாஸ்போர்ட்டின் நகல் ஆகும்.